|

கோயம்புத்தூர் மாவட்டம் [Coimbatore District] மிகவும் செழிப்பான மற்றும் ஆலைகள் நிறைந்த தமிழக மாவட்டம் ஆகும். இதன் தலைமையகம் கோயம்புத்தூர் நகரம். இது தமிழகத்தின் முன்றவது பெரிய நகரம். இம் மாவட்டம் தமிழகத்தின் தலைநகரமாகிய சென்னையில் இருந்து 497 கி.மீ. தொலைவிலும் பெங்களூருவில் இருந்து 330 கி.மீ தொலைவிலும் உள்ளது. மாநில அளவில் கோயம்புத்தூர் மாவட்டம் [Coimbatore District], சென்னைக்கு அடுத்து வருமானம் கொடுப்பதில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் [Coimbatore District], பல வெற்றிகரமான சோழ மன்னர்களாள் 11-ம் நூற்றாண்டுகளில் ஆளப்பட்டது. இம்மாவட்டம் 18-ம் நூற்றாண்டுகளில் மதுரை மன்னர்களிடம் இருந்து மைசூரின் கட்டுப்பாட்டுக்குள் போனது. பிறகு 1799-ஆம் ஆண்டு மைசூர் போருக்கு பிறகு, 1947-ல் இந்தியா சுதந்திரம் பெரும்வரை ஆங்கிளேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் [Coimbatore District], வடக்கு புறத்தில் தமிழகத்தின் ஈரோடு மாவட்டமும் [Erode District], கிழக்கில் திருப்பூர் மாவட்டமும் [Tiruppur District], வடமேற்க்கில் நீலகிரி மாவட்டமும் [Nilgiris District] உள்ளது. மேற்கே கேரளவின் பாலக்காடு மாவட்டம் [Palakkad District] மற்றும் திருச்சூர் மாவட்டமும் [Thrissur District], தென்மேற்க்கில் இடுக்கி மாவட்டமும் [Idukki District] உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் [Coimbatore District] பரப்பளவு 7,649 சதுர.கி.மீ. ஆகும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் [Coimbatore District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] இம்மாவட்டத்தில் 29,16,620 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 78.5% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 34,72,578 பேர் உள்ளதாகவும், இதில் 17,35,362 ஆண்களும் 17,37,216 பெண்களும் உள்ளனர். இப்போது, இங்கு 84.3% பேர் படித்தவர்கள்.
கோயம்புத்தூர் மாவட்டம் [Coimbatore District] 6 தாலுகாகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
* Coimbatore North - வடகோவை
* Coimbatore South - தென்கோவை
* Mettupalayam - மேட்டுப்பாளையம்
* Pollachi - பொள்ளாச்சி
* Sulur - சூலூர்
* Valparai - வால்ப்பாறை
|