ஏ! எந்திர மனிதா! இன்று முதல் சிரிக்கப் பழகு! – “கொடி மரத்தின் வேர்கள்”- ‘கவிப்பேரரசு’ வைரமுத்து
Contact us to Add Your Business
ஏ!
எந்திர மனிதா!
இன்று முதல்
சிரிக்கப் பழகு
கண்ணீர் சுண்டிக்
கடலில் எறி!
–
எரிமலைக் குழம்பா?
இரும்பு காய்ச்சு!
–
பூகம்பமா?
பூச்செடிகளை மாற்றி நடு!
–
தாடி சோகம்
இரண்டையும்
ஒரே கத்தியால்
மழித்து விடு!
–
பத்திரிகை முதல் பக்கம்
அத்தனையும் ரத்தமா?
தலைப்புச் செய்தியில்
தேசமே காணோமா?
தேநீர் குடி
–
ஓசோன் கூரையில்
ஓட்டையா?
குடைபிடி
–
எந்தக் காலத்தில்
பூமி
தலைசுற்றாமல்
சுற்றியது?
–
பல் முளைக்கையில்
ஈறு வலிக்கும்
மாற்றம் முளைக்கையில்
வாழ்க்கை வலிக்கும்
வலியெடுத்தால் வழிபிறக்கும்
வழிபிறந்தும் வலியிருக்கும்
–
பூமி பொதுச் சொத்து
உன் பங்கு தேடி
உடனே எடு
ஒவ்வொரு மேகத்திலும்
உன் துளி உண்டு
ஒவ்வொரு விடியலிலும்
உன் கிரணம் உண்டு
வானம் போலவே
வாழ்க்கையும் முடிவதில்லை
–
முதற்காதல்
முற்றும் தோல்வியா?
இன்னொரு காதலி
இல்லையா என்ன?
பூமியை நோக்கி
அழிவுக் கோளா?
இன்னொரு கிரகம்
இல்லையா என்ன?
–
ஏ
எந்திர மனிதா
இன்று முதல்
சிரிக்கப் பழகு
இந்த பூமி
சிரிப்பவர் சொர்க்கம்
அழுபவர் கல்லறை
உன் உதடு
கல்லறையா? சொர்க்கமா?
–
"கொடி மரத்தின் வேர்கள்"
– 'கவிப்பேரரசு' வைரமுத்து
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தமிழ் இனத்தின் கடைசி வாய்ப்பு நாம் தமிழர் மட்டுமே தமிழகத்தின்
அருமை அருமை
☝️👌👌👌👌♥️♥️
அருமை அன்னா