Login

Lost your password?
Don't have an account? Sign Up

வாருங்கள் மனிதர்களே! சிந்தும் மழையோடு சிநேகமாவோம்! மழையில் தெப்பமாவோம்! – கவிப்பேரரசு வைரமுத்து

Contact us to Add Your Business

மழைப் பிரசங்கம்!

யாரங்கே?

வாருங்கள்!

வருந்திப்பாராம்
சுமக்கிறவர்களே
வாருங்கள்!

வாழ்க்கையை
வயிற்றுக்கு
விற்றுவிட்டவர்களே
வாருங்கள்!

கால்களின்
எண்ணிக்கையால் மட்டும்
விலங்கினின்றும்
வித்தியாசப்பட்டவர்களே
வாருங்கள்!

விண்ணுக்கும் மண்ணுக்கும்
தண்ணீர்ப்பாலம் பாருங்கள்!

திரவ முத்துக்கள்
தெறிப்பதை பாருங்கள்!

யாசித்த பூமிக்கு
அந்த வானம்
வைரக் காசுகள்
வீசுவது பாருங்கள்!

மழை! மழை! மழை!
மழை! மழை! மழை!

மண்ணின் அதிசயம் மழை!

பூமியை வானம்
புணரும் கலை மழை!

சமுத்திரம் எழுதும்
சமத்துவம் மழை!

அதோ பாருங்கள்
தாவரங்களுக்கு
ரத்ததானம் நிகழ்கிறது!

இதோ பாருங்கள்
மழைபாடும்
பள்ளியெழுச்சியில்
ஒவ்வொரு இலையிலும்
உயிர் சோம்பல் முறிக்கிறது!

இது என்ன?
மழையை இந்த மண்
வாசனை அனுப்பி
வரவேற்கிறதா?

அங்கே பாருங்கள்
பள்ளிக்கூடம் விட்ட
குழந்தைகளாய்
மழைத் தாரைகள்!

அதோ! அதோ!
பூமியின் மர்மங்கள்
நனைக்கின்றன!

சரிதான்
பூமிக்கு அடிக்கடி
புனித நீராட்டு விழாவா?

வாருங்கள் மனிதர்களே
சிந்தும் மழையோடு
சிநேகமாவோம்!

மழையில் தெப்பமாவோம்!

– #கவிப்பேரரசு #வைரமுத்து

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

20 comments

 1. @pravink-ls6nr

  மழைப் பேரறிவிப்பு – தமிழ்ச் சொல்

  மழைப் பிரசங்கம் – சமஸ்கிருத வார்த்தை

 2. @user-ns4id7fm1m

  தாவரங்களுக்கு ரத்ததானம் அருமை
  ரசிக்க தெரிந்த தலைவன் மட்டும் இல்லை
  அனைத்தையும் உணரத்தெரிந்தவர் சீமான் அவர்கள்தான்.

 3. @anoopprabhakar2007

  அன்புள்ள சீமான் அண்ணா, இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன்.
  எல்லா புகழும் இறைவனுக்கே .

  ஓ மை காட் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த என் வாழ்க்கை உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் அவனின்றி ஓர் அணுவும் அசையாது.

  எல்லா புகழும் இறைவனுக்கே என ஒரு அருமையான அழகான தலைப்பு எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பை இருக்கிறது காரணம் இல்லாமல் காரியம் இல்லை . எதுவும் காட்சிகள் அவரவர்கள் எண்ணங்களுக்கு காட்சிகளும் கேட்பவையும் எப்படி இருக்கும் என்றால் அவன் பிறப்பிலிருந்து அவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவன் தலையெழுத்து எழுதி விடுகிறது அதன்படி தான் எல்லாம் செயல்படும் அதன்படி தான் சென்று அடையும் அதுதான் உண்மை .அதை யாரும் மாற்றிவிட முடியாது அதுதான் உண்மை எனில் நான் எதுவும் எதிர்பார்க்காமல் கடந்து வந்ததனால் அந்த ஒரு உண்மையை சொல்லுகிறேன் .ஆனால் எல்லோரும் அவர்கள் தலையெழுத்து எப்படி எழுதி இருக்கிறதோ ஆரம்பம் முதல் கடைசி முடிவு வரை அப்படித்தான் இருக்கும் என்பதற்கும் இறைவன் கொடுத்த வரம் சரியாக இருக்கும் யார் சொல்லியும் யாரும் கேட்டு விட முடியாது அவர்களுக்கு கேட்கலாம் ஆனால் அது நடைமுறைப்படுத்த முடியாது என்ன நடக்கணுமோ அதன் சரியாக நடக்கும் அதுதான் உண்மை நடந்தது நடக்கின்றது நடக்கப் போகிறது.

  அது எல்லாருக்கும் இல்லை. அசுரர்களிலும்எப்படி இந்த சமுதாயம் ,நம் நாடு, வீடு எப்படி இருக்க வேண்டும் யார் யார் அதில் இருக்க வேண்டும் என்று இறைவன் கட்டளையிட்டிருப்பார் அல்லவா, அந்த கட்டளைப்படிதான் என்னுடைய எண்ணங்கள் அலைவரிசைசரியாக செயல்படும் அது அந்த இறைவனுடைய இருப்பு இருந்தால் மட்டும்தான் அது செயல்படுவதற்கு ஒரு வாய்ப்பு நமக்கு எல்லாம் கிடைத்திருக்கிறது ..

  அதை எல்லாருக்கும் இல்லை அசுரர்களிலும்தேவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அதையெல்லாம் மாற்ற முடியாது யாருக்கு எப்படி இருக்குதோ அதன்படி தான் நடக்கும் உண்மையில் என்னுடைய ஆடியோ கிடைப்பதை கேட்பதை காட்சிகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது இன்னும் சிறப்பாக இருக்கிறது இதைவிட வேறென்ன வேண்டும்காட்சிகள்.

  ஓ மை காட், நிகழ்ந்தவை காட்சிகளாக வரும் பொழுது அதை பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் அல்லவா.

  ஒரு முக்கியமான ஆடியோ கிடைத்ததுஅதை நான் பதிவிடவில்லை .ஆனால் அதில் ஒரு இரண்டுபெயர் விஷயங்கள் அதில் என்னில் அது எனக்கு ஏற்றதாக இல்லை அதனால் அதை வந்து நான்பதிவிடவில்லை ஆனால் அதை எப்பொழுதும் எந்த ஆடியோவும் நான் கேட்க மாட்டேன் என டாக்டர்ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் டாக்டர் சொக்கலிங்கம்.ஹொவ் டு லைவ் ஹாப்லிஸ்பீச்,மற்ற கருத்துக்கள் எல்லாம் என்னுடைய எண்ணங்களுக்கு அவர் பேசியிருக்கிறார் சென்னை பெஸ்ட் தமிழ் சிறிதுது இந்த இடைப்பட்ட இந்த சிறிய காலத்திற்கு இந்த சிறிது நாள்களுக்கு முன்பு பேசியவை என் அப்பா பேசுவது என்ன என்று இப்பொழுது கிடைத்திருக்கிறதா ரொம்ப ஆண்டுகளுக்குப் பிறகு அதனால்தான் கேட்டேன்.

  திருமண முடிந்த விவரம் தெரிந்த நாளிலே ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் என்று அவருடைய வார்த்தை கருத்துக்கள் ஒரு நாள் வரும் அல்லவா அப்பொழுது அவருடைய பேப்பர் கட்டிங் எடுத்து வைத்திருந்தேன். அதனால் அந்த டாக்டர் அப்பாவை எனக்கு தெரியும்ஆனால் அதன்படி நடைமுறைப்படுத்தின மா செயல்படுத்தணுமா அதெல்லாம் எனக்கு தெரியாது. என அந்நிகழ்வு வேலை அல்லவா தெளிவாக, இந்நிலை கிடைத்தவரம் அருள் ஆசி அல்லவா அதனால் அந்த ஆடியோ கிடைத்தது அது என்ன என்று திரும்ப சொல்கிறேன்.கண்டிப்பாக என் தொடர் சொல்வது சுகிசிவம் அப்பாவிடம் சொன்னாலே போதும் அவர் அங்கு தெரியப்படுத்தி விடுவார், வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் என்று.அப்பாவும் அண்ணர்களும் நிறைந்த உலகம் என் உலகம்இறைவன் கொடுத்த வரம் சரியாக செயல்படுகிறது என்பதற்கு நான் சாட்சி.

 4. @pravink-ls6nr

  1:20
  அன்பு , விருப்பம் = தமிழ்ச்சொற்கள் .
  சமஸ்கிருத வார்த்தைகள் 😂👇👇👇👇
  ஸ்நேஹம் { சினேகம் } நேஷம் { நேயர்)

 5. @anoopprabhakar2007

  அன்புள்ள அண்ணா அழகான வாழ்க்கை அல்லவா நம் கடந்து வரும் பொழுது அந்த உண்மையும் சத்தியம். நேர்மைக்கும் எவ்வளவு நாம் தனிப்பட்ட முறையில் இருந்தோமோ எவ்வளவு துரோகிகளாக நாம் அந்த துரோகிகளுக்கு நாம் தனிப்பட்ட முறையில் இருந்தோமோ அதைஅதையெல்லாம் கடந்து வருவது மிக கடினம் உண்மை சத்தியம்.பொய்யான அந்த வேடமிட்டு மனிதர்கள் துரோகிகள் ஆனால் அந்தக் கூட்டம் எல்லாம் ஒன்றாக இருக்கும். நான் மட்டும் தனித்திருப்போம் ஆனால் அந்நிலையின் நினைத்துப் பாருங்கள் உண்மையில் ஒரு கூட்டம் தன் எல்லாம் ஒன்று சேர்ந்திருக்கும் ஒரு மனிதன் தனியாக அவன் சிந்தனையுடன் அவனுடைய செயல்களில் அவன் வார்த்தையில் உண்மையும் நேர்மையும் நிறைந்த அவன் நடைமுறைப்படுத்துவது எவ்வளவு மிகப்பெரிய கடினம் உண்மையில் அந்நிகழ்வை நினைத்து இப்பொழுதுதான் நான் ஒவ்வொரு நிகழ்வையும் இப்படி கிடைத்ததற்கு நாம் எப்படி நம் கடந்து வந்தோம் என்று நினைத்து ஒவ்வொருகாட்சிகளும் வரும்பொழுது அது என் காட்சிகள் எனக்காக கொடுக்கப்பட்டவை அதுதான் உண்மை என்பது எனக்கு விளங்குகிறது.

  அந்த விலகிப்போன சொந்தங்கள் இப்பொழுது கண்டவுடன் எப்படி மாற்றம் சும்மா வேஷம் எப்படி தொடர் ஏற்படுகிறது காட்சிகள் நிறைய இருக்கிறது அப்படித்தான் இந்த மனிதர்கள்பச்சோந்திஉடனே மாற்றி தன்னும் அவர்கள் மாதிரி காட்டிக் கொள்வார்கள் ஏனால் அது இந்நிகழ்வு அல்ல அந்நிகழ்வில் அவர்கள் எப்படி இருந்தார்களோ அந்நிகழ்வு தான் அவர்கள் அப்படிதான்.இது இப்பொழுது மற்றவர்களுக்காக மாற்றிய மாறி நடிப்பார்கள். மனிதநேயம் இல்லை அன்பு இல்லை கருணை இல்லை எல்லாம் இருந்தால் ஏன் ஆரம்பம் முதல் கடைசி முடிவு வரை அவர்கள் வாழ்க்கை சீராக அமைந்திருக்குமே அது ஏன் இல்லை அது இல்லாத நாள்தானே அவர்கள் வாழ்க்கையும் சரி இல்லை சமுதாயமும் சரியில்லை நாடும் சரியில்லை அதனால்தான் இந்நிகழ்வில் நடந்து கொண்டிருக்கிறது எல்லாரும் எல்லோருக்கும் கிடைத்துவிட்டால் இந்நிகழ்வு நடப்பதற்கு வாய்ப்பே இல்லையே அதுதானே இந்த பாடம் நமக்கு கற்றுக் கொடுக்கிறது. ஏன் அவர்கள் வாழ்க்கை அவர்கள் கையில் அவர்கள் செய்கின்ற வினை கருமவினை பலன் அவர்கள் தான் அவர்கள் ஏற்படுத்திக் கொள்கிறார்கள் இதில் யாரும் ஏற்படுத்திக் கொள்வதில்லை. சில நிகழ்வுகள் நடந்ததுதூரப் போனவர்கள் திரும்ப வந்து என் அம்மாவை சந்தித்து அவர்கள் பணம் கொடுப்பதற்கு என்ன தேவை இந்த ஐந்தாயிரம் பணம் இல்லாமலே என்னப்பா சொத்தைக்கூட வாங்காமல் இருந்தார்கள்.என் தங்கை கணவன் தங்கைஎன் அண்ணனின் மனைவிஎன் தங்க வீட்டிற்கு என் அம்மாவை பார்ப்பதற்கு வருகிறார்கள் எத்தனையோ ஆண்டுகள்பகை அவள் விரட்டி விட்டாலும் நான் வந்து எனக்கு சொந்தங்கள் வேண்டுமென்று இப்பொழுது நிற்பது எதற்குகுவெக்கமா இல்லை. இவ்வளவு நாள் அந்த திமிரு ஆணவம் அகங்காரம் தான் பெரிய ஒரு பெரிய பதவிநம்மளை மிஞ்சிய இந்த உலகத்தில் யாரும் இல்லை அதெல்லாம் எதுவும் கிடையாது.பட்டம் பதவி எல்லாம் இறந்து போனால் பிணம் பிணம் இந்த பிணத்தை எப்பொழுது எடுப்பார்கள் என்று தான் எதிர்பார்ப்பார்கள்.அதுதான் உண்மை அதுதான் உண்மை சத்தியம்.எல்லாம் இருந்து உடல்நிலை படுத்து கிடக்கின்ற சூழ்நிலையில் யாரும் இல்லை அனாதியாக என்று நினைக்கும் பொழுது இப்பொழுது உறவுகளை தேடி வருகின்ற அந்த மனம் இருக்கின்றதே அந்த மனதை என்ன சொல்வது அந்த மனதை என்ன சொல்வதுநினைத்துப் பாருங்கள் வாழ்க்கையின் ரகசியம் அப்பொழுதுதான் தெரியும் இதுதான் நடக்கின்றது .நான் கடந்து வந்த காட்சிகள் எல்லாம் கடைசியில் அவர்கள் செய்த வினைக்கு பலன் கண்டிப்பாக வந்தே தீரும் இதில் எந்த வித அச்சமும் இல்லை பயமும் இல்லை உண்மையை உரைத்து சொல்கிறேன். எது அவர்கள் ஏற்படுத்துகிறார்களோ அது அவர்களுக்கு வந்தடைகிறது இதை யாரும் மாற்றிவிட முடியாது. இது எத்தனை கோடி பிறவி எடுத்தாலும் அப்படி அவர்கள் எழுதியிருக்கிறபடி தான் அதன் நடக்கும்.நடக்கின்றது நடக்கப் போகிறதுநடக்கின்றது நடக்கப் போகிறது இதுக்கெல்லாம் காரணம் எல்லாம் அவன் செயல்.

  ஓ மை காட், ஐ லவ் யூ என் உயிர் சாய் அது மட்டும் இல்லை .அந்த இரண்டு ,பாட்டு தேசமே பிரபாகரன் அந்த பாட்டை அடிக்கடி போட்டு என் உள்ளம் மகிழ்கின்றது இது உண்மை இது சத்தியம்.

 6. @anoopprabhakar2007

  அன்புள்ள சீமான் அண்ணா,இந்த நாள் இந்த பதிவு உங்களுக்கு மட்டும் தான் என் தொடர் அத்தனை பேருக்கும் தெரியப்படுத்தி விடுங்கள் இன்று இன்று சிறிது வேலை இருக்கிறது மற்ற காட்சிகளும் முழுவதும் நான் பார்க்க வேண்டும் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

  இப்பொழுதுதான் இந்த பதிவை கேட்டேன் அழகான வார்த்தைகள் அழகான காட்சிகள் அனைத்தும் காரணம் இல்லாமல் காரியமில்லை அனைத்து பஞ்சபூதங்களும் நம் வாழ்க்கையும் நம் உடலும் ் ஒன்றுடன் ஒன்று தொடர்பிருக்கிறது. அத்தனை காட்சிகளும் வார்த்தைகளும் கருத்து தெளிவு சிந்தனைகளும் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பிருக்கிறது. ஆனந்தம் பரமானந்தம் மழைநீர் மேகம் கருமேகம்என்றாலே அது என்னுள் ஏற்படுகின்ற ஒரு உணர்வு அது இது உணர வைத்திருக்கிறது அதுதான் உண்மை இதில் உள்ள அத்தனை வார்த்தைகளும் என்னுள் தொடர்பு இருக்கிறது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். எல்லாம் அவன் செயல், அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது .என் உயிர் மூச்சு என் சாய் ஐ லவ் யூ சாய், சாய் சாய் சாய்சாய் தான் .அவர் இன்றி நான் இல்லை நான் இன்று அவன் இல்லை எல்லாம் புகழும் இறைவனுக்கே காட் பிளஸ் யூ அண்ணா நன்றி நன்றி வாழ்த்துக்கள்.

  உண்மை சத்தியம் .வாய்மை வெல்லும் .நீதி நேர்மை நியாயம் என் கொள்கை தப்பு நடந்தால் தட்டிக் கேட்பவையும் என் கொள்கை இதுதான்என் முக்கியமான உயிர் அனைத்தும்.

Leave a Comment

Your email address will not be published.

*
*