Login

Lost your password?
Don't have an account? Sign Up

மனிதன் மட்டுமே பழையவன் என்று நடந்துபோகுது காலநதிஅதன் நடையில் எத்தனை தாளகதி! – கவிப்பேரரசு வைரமுத்து

Contact us to Add Your Business

காலநதி !

நடந்துபோகுது காலநதி
அதன் நடையில் எத்தனை தாளகதி!

தனது கரைதனில் நுரையிலாமலும்
தனது மேனியில் நரையிலாமலும்
நடந்துபோகுது காலநதி
அதன் நடையில் எத்தனை தாளகதி!

சூரியக் கனியின் விதையாய் பூமி
பிதுங்கி வந்ததை இன்று நினைத்து
சூரியக் கனியே விதையை விழுங்கும்
சூழ்ச்சியை இன்று எண்ணிச் சிரித்து
நடந்துபோகுது காலநதி
அதன் நடையில் எத்தனை தாளகதி!

உலகம் புதியது; வளமும் புதியது
உள்ளம் மட்டுமே பழையது என்று
மலர்கள் புதியன; தளிர்கள் புதியன
மனிதன் மட்டுமே பழையவன் என்று
நடந்துபோகுது காலநதி
அதன் நடையில் எத்தனை தாளகதி!

எத்தனை மகுடம்? எத்தனை உடைவாள்?
இந்த மண்ணிலே புதைந்தன அன்று?
அத்தனை அறிந்தும் ஆணவ மனிதன்
கர்வச் சகதியில் புதைவது கண்டு
நடந்துபோகுது காலநதி
அதன் நடையில் எத்தனை தாளகதி!

மனிதன் தேடிய தேடல்கள் எல்லாம்
மனிதனை மட்டும் மறந்தன என்று
மனித குலத்தின் பயணம் இன்றும்
மர்மமாகவே இருப்பது கண்டு
நடந்துபோகுது காலநதி
அதன் நடையில் எத்தனை தாளகதி!

இரத்த தானம்!

– கவிப்பேரரசு வைரமுத்து

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

15 comments

  1. Fluffy candyfloss 🍭

    ஆகா இயற்கையின் அழகியல் மழையும் ஒன்று அற்புதம் அண்ணா அழகான பதிவு ஆழமான கவிதை வரிகள்
    அருமை அருமை ஆனந்தம் இன்னிசை தமிழ் சிறக்க நல்லது செய்து நாளும் பொழுதும் நல்லது செய்து உங்கள் பயணம் தடை இன்றி தொடர இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா நோய் நொடி இன்றி என்னாளும் இருக்க இறைவனை மாவீரச்செல்வங்களை தினம் தினம் வேண்டுகிறோம் உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் மீண்டும் இதயம் நிறைந்த புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா 🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️ 👍🏽👍🏽👍🏽👍🏽

Leave a Comment

Your email address will not be published.

*
*